மேம்பாலங்களுக்கு கீழே உள்ள இடத்தில் கடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு
மேம்பாலங்கள் கீழ் உள்ள இடங்களை மேம்படுத்தி தெருவோர வியாபாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாலங்களுக்கு கீழ் சிறு சிறு கடைகள் அமைப்பதற்காக முயற்சியை தொடங்கி உள்ளது.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ரூபாய் 25 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக பீமா நகர் அருகே குறுகிய வணிக சாலைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் கடைகள் அமைக்கும் வியாபாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக 50 கடைகளை உருவாக்கியுள்ளனனர். இது முதன்மையாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடைகளை பிரிக்கும் வகையில் பக்கவாட்டு சுவர்கள் உருவாக்குவதற்கான கட்டமான பணிகள் நடைபெற்று வருகின்றன பல்வேறு பாலங்களுக்கு அடியில் உள்ள காலியிடங்களையும் இது போன்றே பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மன்னார்புரம் ரவுண்டானாவில் உள்ள காலியிடம் மற்றும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே உள்ள பகுதிகளை சென்னை கத்திபாரா நகர சதுக்கத்திற்கு இணையாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision