வாக்கு எண்ணிக்கை - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னேற்பாடுகள்
இந்திய தேர்தல் ஆணைத்தின் உத்தரவின் படி 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த (19.04.2024) அன்று வாக்குப்பதிவு நிறைவுற்றதை தொடர்ந்து, எதிர்வரும் (04.06.2024) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டமானது 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் இன்று (27.05.2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான (04.06.2024) அன்று வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு 24. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி அலுவலர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கோ.செந்தில் குமாரி பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) என்.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision