மத்திய மண்டலத்தில் நிலுவையில் உள்ள கஞ்சா வழக்குகள் மீது நீதிமன்ற விசாரணை தொடக்கம்
நிலுவையில் இருந்த கஞ்சா வழக்குகள் மீது ஒரு வாரம் சிறப்பு கவனம் (Special Drive) செலுத்தி 285 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும் 31 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்கபட்டது.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் கடந்த 03.05.2022 முதல் 10.06.2022 வரையினை காலகட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள கஞ்சா வழக்குகளில் விசாரணைகளை விரைந்து முடிப்பதற்கும், நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணையைத் தொடங்குவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்ட விரோதமாக வணிக நோக்கத்திற்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும். மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 வழக்குகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மண்டலத்தில் 03.05.2022 அன்று புலன் விசாரணையில் இருந்த 89 கஞ்சா வழக்குகளில் ஒரு வார காலத்திற்குள் 282 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 66 கஞ்சா வழக்குகளிலும், கரூர் மாவட்டத்தில் 45 கஞ்சா வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை துவங்கப்படாமல் இருந்த 27 கஞ்சா வழக்குகளில் கடந்த ஒரு ஊார காலத்தில் நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் ஒரு வழக்கும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு வழக்கும் தண்டணையில் முடிந்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துரிதமாகத் துவக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்களது மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள கஞ்சா வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்குகளில் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்படுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விரையாக தொடங்கப்படுவதையும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அறிவுரையின் பேரில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர்கள் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் முற்றிலுமாக ஒழித்திட தொடர் சோதனைகள் நடத்த அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் துரிதப்படுத்தி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனைப் பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்று மந்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO