அமைச்சர் திறந்து வைத்த புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவர் விரிசல்

அமைச்சர் திறந்து வைத்த புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவர் விரிசல்

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இதையடுத்து சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட வீரம்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 'மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நவல்பட்டு போலீஸ் காலனியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு பகுதியில் பழுதடைந்துள்ள உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு பதிலாக ரூ. 2 கோடி மதிப்பிலான புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில்  சோழமாதேவி பஞ்சாயத்தில் 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சரால் திறக்கப்பட்டது. புதிய கட்டிடத்தின் திறப்பு விழா அன்றே சுற்றுச்சுவர் இரண்டு பக்கங்களும் விரிசல் உடன் காணப்பட்டது.

இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், உடனடியாக காம்பவுண்ட் சுற்றுச்சுவரை விரிசல் ஏற்படாமல் தரமான முறையில் புதுப்பிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision