ஐடிஐ அருகே உள்ள அரசு மதுபான கடை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஐடிஐ அருகே உள்ள அரசு மதுபான கடை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அரசு ஐ.டி.ஐ உள்ளது. இதன் எதிரிலே உள்ள பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மது பிரியர்கள் சிலர் மதுபானங்களை குடித்துவிட்டு ஐடிஐ அருகே காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர்.

மேலும் சிலர் மாணவ மாணவிகள் அவ்வழியே வருவதை கூட கண்டு கொள்ளாமல் மது அருந்தி வருகின்றனர். இதனால் மாணவிகள் மிகவும் அச்சத்துடன் கல்லூரிக்குச் செல்லும் நிலை ஏற்படுவதுடன், சில மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மதுபான கடைய மூட கோரி மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு ஐடிஐ எதிரே செயல்படும் அரசு மதுபான கடையை மூட கோரி மாணவர் சங்கர் மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கல்வி நிறுவனம் அருகே மதுபானக் கடை நடத்துவது தான் தமிழக அரசின் சாதனையா? எனவும், டாஸ்மார்க் விற்பனையை நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலமாக அரசின் வருமானத்தை பெருக்குவது அரசின் நோக்கமாக இருந்தாலும் உங்களுடைய டார்கெட் மாணவர்களா எனவும்,

500 கடைகளை மூடிய அரசுக்கு அரசு ஐடிஐ அருகில் செயல்படும் மதுபான கடை அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா? எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். மேலும் உடனடியாக மதுபான கடையை மூடாவிட்டால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள், அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision