வாக்காளர் பட்டியல் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் விபரம் கண்டுபிடிப்பு - திருச்சி ஆட்சியர் சிவராசு பேட்டி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது......
நாளை நடைபெறும் 6-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 600 முகாம்கள் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. கையிருப்பில் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது.திருச்சி மாவட்டத்தில் நாளை 6 - வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 65% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 6 - வது கட்டமாக நடைபெறும் இம்முகாமில் வாக்காளர் பட்டியலைக் கொண்டு இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் விபரம் _ இனி செலுத்த வேண்டியவர்கள் விவரம் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு இம்முகாமில் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதற்காக சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர பகுதியில் 71.5% மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், கிராமப்புற பகுதியில் 60% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளதாவர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் இதுவரை 121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இனி மழைக்காலங்கள் என்பதால் திருச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn