பாலதண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் கும்பாபிஷே விழாவிற்கு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

பாலதண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் கும்பாபிஷே விழாவிற்கு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் நாகையநல்லூர் மேல தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் வருகின்ற மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ககும்பாபிஷேகம் நடைபெறுவதால் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்

ஸ்ரீராம சமுத்திரம் காவிரி ஆற்றிற்க்கு சென்று அங்கு புனித நீராடி அங்கு ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மஞ்ச மேடு கீழ மஞ்சமேடு காட்டுப்புத்தூர் பாலபுரம் வழியாக நாகையநல்லூர் மாரியம்மன் கோவில் பகவதி அம்மன் கோவில் மல்லாண்டார் கோவில் வழியாக ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் வந்தடைந்தனர்.

பாலா தண்டாதபாணி முருகன் . கோவில் இடும்பன் கோவில் மயில் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.விழாவில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிலில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானமும் வழங்கினர்

 நிகழ்வில் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்விழாவிற்கான ஏற்பாட்டினை நாகையநல்லூர் மேல தெரு ஸ்ரீ பால தண்டாதபாணி திருக்கோவில் பங்காளிகள் ஏற்பாடு செய்தனர்பாதுகாப்பான ஏற்பாடுகளை தொட்டியம் காவல் ஆய்வாளர் ஞானசேகர் தலைமையிலும் காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் சங்கர் முன்னிலையிலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் வழிநெடுகளும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision