ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் பால் குட ஊர்வலம்

ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் பால் குட ஊர்வலம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசிவிசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள ஆறுமுக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு மகோற்சவ இசை விழா மற்றும் பால்குட உற்சவம் நடைபெற்றது.தா.பேட்டையில் ஆடி கிருத்திகை விழா குழுவினர் 93-ம் ஆண்டாக நடத்தும் மகோற்சவ இசை விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோயில் திடலில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டது.அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள், சுபிட்சமுடன் வாழவும் பிரார்த்தனை செய்யபட்டது.

திரளான பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்து கொண்டும் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க காவடி எடுத்து ராஜவீதி வழியாக உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து பால்குட ஊர்வலம் சிவாலயத்தை வந்தடைந்து. பின்னர் ஆறுமுகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆறுமுகப்பெருமான் சிறப்பு விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளினார். விழாவில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision