திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரை கடைகளை அகற்றியதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா!!

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரை கடைகளை அகற்றியதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா!!

திருச்சி மணிகண்டம் அருகே ஆலம்பட்டி ரோடு பிரிவு இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள கடைகளை அகற்றியதை கண்டித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Advertisement

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 20 வருடங்களாக கடை வைத்துள்ளதாகவும், சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்து விழுந்துள்ளது.

Advertisement

ஆனால் இதற்கும், எங்கள் கடைக்கும் எந்தஒரு சம்பந்தமும் இல்லை என்றும், 7 அடி அகலம் உள்ளது என்றும், மணிகண்டம் காவல்துறையினர் தொடர்ந்து தங்களை இவ்விடத்தில் கடைகள் வைக்கக்கூடாது என எழுதிக் கொடுங்கள் எனக் கூறி மிரட்டுவதாகவும், கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் எனவே தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO