ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாற்றம் - கடும் எதிர்ப்பு!

ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாற்றம் -  கடும் எதிர்ப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையராக இருப்பவர் ஜெயராமன். இவர் கடந்த 16ஆம் தேதி கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆணையராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

இந்த இடமாற்றத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்‌. திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் மக்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பாக திருச்சி மாநகர பகுதிகளில்... "ஆன்மீகச் செம்மல் போற்றும் வகையில் உலக பிரதான நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு பேரவை (யுனெஸ்கோ) பாராட்டும் வகையிலும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மேம்படுத்த இன்னும் உழைத்து வரும் கோவில் இணை ஆணையர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO