திருச்சி மாநகரில் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சியில் தீபாவளி பண்டியையொட்டி அதிகாலையில் இல்லங்களில் பட்டாசு, மத்தாப்பு வெடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாக கொண்டாட்டம். இந்துக்களின் முக்கிய பண்டிகையானதும், முருகப்பெருமான் நரகாசுரனை வதம் செய்து மக்களைக் காப்பாற்றிய தினத்தைக் கொண்டாடும் விதமாவும், தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இல்லத்தில் ஏற்றப்படும் தீபஒளியைப் போன்று இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி நிறையவேண்டும் என்ற நோக்கில் தீபாவளிக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி அதிகாலையில் எழுந்து நீராடி, குழந்தைகள் அனைவரும் புத்தாடை அணிந்து, கடவுளை வணங்கிவிட்டு பின்னர் குடும்பத்தினரிடத்தில் பெரியவர்களிடத்தில் ஆசிர்வாதம் பெற்றும், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
தங்களது குடும்பத்தினரிடம் ஆசி பெற்று பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். திருச்சி மாநகரில் இன்று அரசு அறிவித்தபடி அதிகாலையிலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது வீடுகளின் முன்பு வெடிவெடித்தும், கலர் கலர் மத்தாப்பு, தரைச்சக்கரம், புஸ்வானங்களைக் கொழுத்தியும் பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, திருவெறும்பூர், மனச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision