வட மாநிலத்தவருக்கு திராவிட சித்தாந்தத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் - திருச்சியில் நடிகர் சத்யராஜ் பேச்சு

வட மாநிலத்தவருக்கு திராவிட சித்தாந்தத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் - திருச்சியில் நடிகர் சத்யராஜ் பேச்சு

திருச்சி மாவட்ட மாநகர ஓட்டுனர்அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் முகமது இலியாஸ், மாநகர அமைப்பாளர் சரவணன் சண்முகம் ஆகியோர் தலைமை வைத்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில ஓட்டுனர் அணி செயலாளர் செங்குட்டுவன், திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசுகையில்.... அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரச்சினை போக்கும் வகையில் இறப்பின் போது அவர்களுக்கும் நிதி உதவி கிடைக்கும் வகையில் அவர்களுக்கு உரிய காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசு செலுத்தும் என தமிழக முதல்வர் கூறியுள்ளதற்கு தலை வணங்குகிறேன்.

கல்வியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ தமிழக முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொல்வதைக் கேட்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையில் சந்திரபாபு நாயுடு இருக்கிறார் கவலை வேண்டாம்.

நார்வேயில் நார்த்திகம் அதிகம் அதனால் தான் அவர்கள் சுகமாக உள்ளனர் நார்வே கல்வித்தரத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். நான் 225 படங்கள் நடித்துள்ளேன். இதில் அமைதிப்படையும், வால்டர் வெற்றிவேலும் 200 நாட்கள் ஓடியது வால்டர் வெற்றிவேல் வெற்றிவிழா திருச்சியில் தான் நடந்தது.

அதேபோல் தந்தை பெரியார் படம் திருச்சியில் எடுக்கப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர். காரணம் அங்கு கல்வி தரம் சரியாக இல்லை. தமிழ்நாட்டின் கல்வி தரம் மற்ற நாடுகளின் கல்வி தரத்தோடு தான் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. அதனால் தான் இந்த மாநிலத்திற்கு வருபவர்கள் தமிழகத்தில் வந்தால் அமெரிக்கா, லண்டனில் வாழ்வது போல் வாழலாம் என நினைக்கின்றனர்.

அவர்களுக்கு சுயமரியாதை பகுத்தறிவு, பெண் விடுதலை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அங்கு நடக்கும் கொடுமைகள் தடுக்கப்படும். தமிழகத்தில் பாமர மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது போல் வட மாநில திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களும் திராவிட மாடல் ஆட்சி வந்து விடுவார்கள் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது.

தமிழகத்தின் வளர்ச்சி அவர்களுக்கு புரியும் ஏன் நாம் 40-க்கும் 40 நான் பெற்றோம் என்பதும் தெரியும். உபியில் பாதிக்கு பாதி தான் பெற்றார்கள் திராவிடம் தெரிந்து இருந்தால் முழுமையும் பெற்று வந்திருக்கலாம். கோவையில் வட மாநிலத்தவர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு திராவிடம் பற்றியும் சித்தாந்தம் பற்றியும் எடுத்து கூறுவதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும் நான் உதவ தயார்.

இந்த சத்யராஜை அவர்களுக்கு தெரியாது. கட்டப்பாவை தெரியும். அஸ்ஸாம், பெங்கால், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக நான் இருப்பேன். கலைஞர் 14வது வயதில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்றால் அவர்பெரியார் அண்ணா கொள்கைகள் ஈர்க்கப்பட்டதால்தான் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. நான் கலைஞரிடம் தோழமையாக பழகி உள்ளேன் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision