திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ வெற்றி
திருச்சி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, 3,16,094 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 5,42,213 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
திருச்சி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, அ.தி.மு.க., வேட்பாளராக கருப்பையா, பா.ஜ., கூட்டணி சார்பில் அ.ம.மு.க., வேட்பாளராக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் உட்பட 35 பேர் போட்டியிட்டனர். திருச்சி, டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
தொகுதியின் மொத்த வாக்காளர்கள் :
ஆண் வாக்காளர் : ஏழு லட்சத்து 57 ஆயிரத்து 130
பெண் வாக்காளர் : ஏழு லட்சத்து 96 ஆயிரத்து 616
மூன்றாம் பாலினம் : 239 பேர்.
வாக்களித்தவர்கள் :
ஆண் வாக்காளர் : ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 264
பெண் வாக்காளர் : ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 844
மூன்றாம் பாலினத்தவர் : 102
ஓட்டு சதவீதம்: 67.52.
வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் ஓட்டு :
வெற்றி வேட்பாளர் துரை வைகோ (மதிமுக) – 5,42,213,
2வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு : கருப்பையா (அதிமுக) – 2,29,119,
3வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு : ராஜேஷ் (நாம் தமிழர்) – 1,07,458,
4வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு : செந்தில் நாதன் (அமமுக) – 1,00,747
5வது இடம் பிடித்த வேட்பாளர் மற்றும் ஓட்டு சுயேச்சை செல்வராஜ்– 14796,
நோட்டா ஓட்டுக்கள்: 13,849
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision