இலக்கை மிஞ்சி சாதனை - ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.

இலக்கை மிஞ்சி சாதனை -  ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.

(2024 - 25) ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை தமிழ் நாடு அரசு (01.3.2024) முதல் தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளின் படி ஒவ்வொரு பள்ளியும் இலக்கை நிர்ணயம் செய்து மாணவர் சேர்க்கையை வீடு தோறும் தேடிச் சென்று நிகழ்த்தி வருகின்றனர்.

அந்தநல்லூர் ஒன்றியத்தில் முதல் இலக்காக (2023- 24) ஆம் கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக அடுத்த ஆண்டு முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து தலைமை ஆசிரியர்கள் கடும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் முருங்கைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் (2023- 24)ல் 5ம் வகுப்பு முடித்து 3 பேர் ஆறாம் வகுப்பு செல்ல உள்ளனர்.

(2024- 25) ஆம் ஆண்டிற்கு ஐந்து மாணவர்களை சேர்த்து அடுத்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையை 31 ஆக உயர்த்தி இலக்கை மிஞ்சி சாதனை செய்த முருங்கைப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, உதவி ஆசிரியர் ஜெயந்தி மற்றும் மாணவர்களை அங்கன்வாடியிலிருந்து அழைத்து வந்து உள்ளூர் பள்ளியில் சேர்த்த அங்கன்வாடி ஆசிரியர் ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம், மேற்பார்வையாளர் மீனா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இப்பள்ளியானது (2019 - 20)ஆம் கல்வி ஆண்டில் 13 மாணவர்களுடன் பரிதாபமாக இருந்தது. இன்று அரசின் நலத்திட்டங்களால் 31 மாணவர்களுடன் தலைகீழாக மாற்றமடைந்து அந்தநல்லூர் ஒன்றிய அளவில் முதல் பள்ளியாக (2024- 25)ல் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய தலைமை ஆசிரியர் விருதிற்கு சுமதி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision