ரயில்வே கேட்டை திறக்க விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் குண்டு கட்டாக கைது

ஜீயபுரம் ரயில் நிலையத்தில் உள்ள மூன்று ரயில்வே கேட் உள்ளது, அதில் முதல் கேட் பொதுபாதையாக உள்ளது, இரண்டாவதாக உள்ளது, விவசாயத்திற்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் டிராக்டர், நெல் அறுவடை மிஷின், உழவு உபகரணங்கள் செல்வது, விவசாயிகள் வயலுக்கு செல்லும் பொதுபாதையாக சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது, இதனை விவசாயிகள் ரயில் பாதை அமைக்கபட்டத்தில் இருந்து வயலுக்கு நாள்தொறும் சென்று வரும் அத்தியாவசிய பாதையாக இருந்து வருவதை தற்போது ஒரு மாதத்திற்கு முன்னர் கேட்டினை மூடி திறக்காமலேயே ரயில்வே நிர்வாகம் இருந்து வருகின்றனர், இதனால்
விவசாயிகள் வயலுக்கு செல்லமுடியாமல் பெரும் அவதிவுறுகின்றனனர், இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அந்த கேட்டை திறந்து விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி ஜீயபுரம் ரயில் நிலையத்தில் அருகே கேட்டை மறித்து
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில்வே கேட்டை மூடவிடாமல் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி அதிவேக ரயில் எலமனூர் பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் கேட் மூடப்பட்டு ரயில் சென்றது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision