டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் உழவு கருவிகளுடன் பேரணி!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் உழவு கருவிகளுடன் பேரணி!!

கடும் குளிாிலும் டெல்லியில் தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு சாா்பாக திருச்சி குழுமணி எம்.ஜி.ஆா் சிலையிலிருந்து டிராக்டா்,டயா் மாட்டு வண்டி,இருசக்கர வாகனங்களில் ஜல்லிக்கட்டு காளையுடன் விவசாயிகள் பேரணி நடத்தினர் .

Advertisement

பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசு உடனடியாக வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தில் சென்றனர். பேரணி அயிலா பேட்டை சென்று மீண்டும் குழுமணி எம்ஜிஆர் சிலையில் நிறைவடைந்தது.

Advertisement

இப்பேரணி திருச்சி மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன் மற்றும் உய்யகொண்டான் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS