முகக் கவசங்கள் அணியாமல் பயணிக்கும் பொதுமக்கள் - சொந்த செலவில் இலவசமாக வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்!

Oct 21, 2020 - 01:31
 232
முகக் கவசங்கள் அணியாமல் பயணிக்கும் பொதுமக்கள் - சொந்த செலவில் இலவசமாக வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்!

கொரோனா தொற்றால் திருச்சி மாநகரில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 6 மாத காலமாக களத்தில் நின்று போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் என அவர்களின் பணியை வெறும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது.

Advertisement

பலர் உயிர் தியாகம் செய்தும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலரை காப்பாற்றியுள்ளனர். தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் முகக் கவசம் , சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அன்றாடம் சிலரை நாம் பார்த்துதான் வருகிறோம்‌.திருச்சி மாவட்டத்தில் தற்போது தினந்தோறும் 60-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைகின்றனா்.

Advertisement

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது அபதாரம் மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். திருச்சி மாநகர காவல் துறையின் பணிகள் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தங்களால் முயன்ற வித்தியாசமான முறையில் எப்படி எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் எளிய வகையில் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு ஆரம்பமான முதல் பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியவர் இவர். தன்னுடைய சொந்த செலவில் இலவசமாகவோ கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியவர். திருச்சி மாநகர காவல் குற்ற தடுப்பு காவல் ஆய்வாளராக இருப்பவர் ஜோதிமணி. 

இவர் தனது சொந்த செலவில் இலவசமாக முகக் 

கவசங்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு இல்லாமல் முகக் கவசங்கள் அணியாமல் செல்லும் பொதுமக்களை அழைத்து அறிவுரை கூறி வழங்கி வருகிறார். திருச்சியில் NSP ரோடு, சின்னக்கடை வீதி, பாபு ரோடு, ஜங்ஷன் பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் இல்லாமல் சுற்றித் திரியும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதுபோல ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்காக தன்னுடைய சொந்த செலவில் காவல் ஆய்வாளர் செய்த செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.