ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து விட்டீர்களா ? இல்லையெனில் உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம் !!
ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கு அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, இந்த செயல்முறை அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டுவிட்டது. ஓய்வூதியதாரர் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.
நீங்களும் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கப் வேண்டும். இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மூலம் எந்த வேலையையும் செய்வது சுலபமாகிவிட்டது. ஆனால் இதில் சிறிது கவனக்குறைவு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையில், ஓய்வூதியதாரர்களும் சிலரால் ஏமாற்றப்படுகிறார்கள்.
சமீப காலமாக, பதிவுக் கட்டணத்திற்கு ஈடாக ஆயுள் சான்றிதழ் தருவதாகக் கூறி ஓய்வூதியதாரர்களை ஏமாற்றும் பல போலி இணையதளங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதாவது போலி இணையதளங்களை உருவாக்கி லைஃப் சர்டிபிகேட் கொடுத்து மோசடி செய்பவர்கள் ஏமாற்றுகிறார்கள். சில மாதத்திற்கு முன்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும் இந்த விஷயத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மோசடி செய்பவர்கள் அரசாங்க வலைத்தளங்களைப் போன்ற URL களைக்கொண்ட வலைத்தளங்களை உருவாக்கி, ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்குவதாகக் கூறி வருகின்றனர். மாறாக, ஓய்வூதியர்களிடமிருந்து பதிவுக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். எனவே, ஓய்வூதியம் பெறுவோர் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்காமல் சரியான சான்றளிக்கப்பட்ட இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஜீவன் பிரமான் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கியமான டிஜிட்டல் சேவையாக உள்ளது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல் என்பதை அறிக. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களாக இருக்கிறார்கள். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். அதே எண்ணிக்கை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் இருந்து இந்த எண்ணிக்கை வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision