வெளிநாட்டில் பணி செய்ய செவிலியர்களுக்கு இலவச மொழி பயிற்சி : ஆட்சியர் தகவல்!

வெளிநாட்டில் பணி செய்ய செவிலியர்களுக்கு இலவச மொழி பயிற்சி : ஆட்சியர் தகவல்!

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் தமிழகத்திலுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து வெளிநாட்டில் செவிலியர்களை பணியமர்த்தம் செய்ய பல்வேறு நாடுகளில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதன் முறையாக வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு செல்ல விரும்பும் தகுதியுடைய செவிலியர்களுக்கு அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி, குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் மொழிகள் இலவசமாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பயிற்றுவிக்கப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgjofeyVZdUIZd8nrtX2bQ9b1whPygsYEooMzr-CuYfUXg/viewform?pli=1 என்ற இணைப்பில் பதிவு செய்துக்கொள்ளுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி (6379179200) (044-22505886/044-22502267) எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision