இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (RKVY)-Raftaar 2021-22 இணைந்து நடத்தும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சுப்ரமணியபுரம் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட, ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் அவர்கள் முகாமினை தொடங்கி வைத்தார்.
திருச்சி கோட்டம், கால்நடை பராமரிப்பு துறை, உதவி இயக்குநர் மரு.அமருதைராஜு மேற்பார்வையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விலங்குகள் வழியாக பரவும் நோய்களில் ஒன்றான வெறிநோய் குறித்து துண்டு பிரசுரம் செல்லப்பிராணிகள் வளர்போருக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் முறை, வெறி நோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி?. நாய் கடித்தவுடன் செய்ய கூடாதவை. தடுப்பூசியின் முக்கியத்துவம், கடித்த நாய்களுக்கான சிகிச்சை ஆகிய குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம், வரைப்படம் மூலம் மாணவ, மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் கால்நடை மருந்தகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தெரு நாய்கள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகள் மொத்தம் 92 நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
முகாமில் மரு.எஸ்.கணேஷ்குமார். கால்நடை உதவி மருத்துவர், மருகீரை தமிழ் அசோகன், கால்நடை உதவி மருத்துவர். ந.லட்சுமி மற்றும் செல்வி.வெ.ரம்யா கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் மு.மலர்கொடி, ப.வேல்முருகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn