பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பில் மொத்தம் 29,059 மாணவர்களுக்கும், 12ம் வகுப்பில் 23,936 மாணவர்களுக்கும் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலை ,உயர்நிலை பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இதில் மேல்நிலை, உயர்நிலை அரசு உதவி பெறும் மொத்தம் 317 பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று காலை10 மணி முதல் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினார்கள்.இன்று தொடங்கிய பாட புத்தகம் வழங்கும் பணியானது தொடர்ந்து தினமும் காலை 10 மணி முதல் பள்ளியில் மாணவர்கள் முகக் கவசங்கள் அணிந்து வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி குறிப்பிட்டார்.