தண்ணீர் அமைப்பின் சார்பில் பச்சைமலையில் பசுமை வன உலா!
தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி எம்.ஏ.எம்( M. A.M ) பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி யின் மேலாண்மை பிரிவு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தை சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு சூழலியல் பசுமை வன உலா பச்சமலையில் நடைபெற்றது.
தண்ணீர் அமைப்பின் சார்பில் செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர் கி.சதிஷ் குமார் , ஆர்.கே. ராஜா ஒருங்கிணைத்தனர்.உடன் கல்லூரி பேரா. நஜ்மா , ஜிம்மி, மெர்சி ஆகியோர் வழி நடத்தினர்.இந்நிகழ்வில் சுமார் 40 மாணவர்கள் பங்கேற்றனர்.
இயற்கையின் அமைப்பை அதன் தனித்துவ சிறப்புகளை புரிந்து கொள்வதற்குமான நிகழ்வாய் நடைபெற்றது.இயற்கையின் அமைப்பில் காடுகள் மலைகள் வகிக்கும் சிறப்புகளையும் பச்ச மலையின் சிறப்புமிக்க மரங்கள் உயிரினங்கள், வாழிடச் சூழல், விளையும் தானியங்கள்.
நில அமைப்பு குறித்தும் அறியும் வண்ணமாக அமைந்தது.
இதனிடையே 4 km பசுமை வன உலா நடைபெற்றது.மாணவ மாணவியர்கள் இயற்கையின் பேரெழிலை அதன் மகத்துவத்தை அதனூடே பயணித்து உணர்ந்தனர். மூலிகைகள் புதர்க் காடுகள், நெடுமரங்கள், ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இடையே கண்டுணர்ந்தனர்.
மாலை மங்களம் அருவி பகுதியில் விதைப் பந்துகள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வீசியெறிந்த நெகிழிப்பொருட்கள் சேகரித்து அகற்றினர்.