அடுத்தகட்டமாக திருச்சி இடைமலைப்பட்டி புதூரில் அட்சயபாத்திரம் திட்டம்!
திருச்சியில் அடுத்தகட்டமாக இடைமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அட்சயபாத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் தினமும் வழங்குவதாகும்.
தமிழக அரசின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விதவிதமான வகையில் சத்துணவு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதல் காய்கறிகளை பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆகியவற்களிடம் பெற்று அவற்றை சத்துணவுடன் சேர்த்து கூடுதல் ஊட்டச்சத்து பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டமானது பள்ளிமாணவர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாகவும், எவ்வித பணம் வசூலிப்பதும் செலவும் இதில் இல்லை.
இந்நிகழ்ச்சியில் சைன் திருச்சி மனோஜ் தர்மர், முதல்வர் பணிநிறைவு சிவகுமார், வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி யுகா அமைப்பு தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமை ஆசிரியர் ஜெயந்தி உதவி ஆசிரியர் புஷ்பலதா மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.