திருச்சி மாவட்டத்தில் 20,399 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 448 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்..... ரொம்ப அழகாக நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்து சொன்னார்கள். இது வந்து ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு நிகழ்வு சைக்கிள் மட்டுமே இருக்கின்றது. சைக்கிளை ஒரு மெஷின் மாதிரி பார்க்க கூடாது. இது பல பேருடைய வாழ்க்கைச் சக்கரத்திற்கு அவருடைய வாழ்க்கையை உயர்த்தியதற்கு இது பெரும் உதவியாக இருந்திருக்கும்.
இது ஒரு காலத்தில் பெரிய பெரிய தலைவர்களும் பார்க்கிறோம். இந்த மாதிரி தங்களுடைய பயணத்தை தொடங்கி வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்தை நோக்கி வருகின்ற பயணம். பள்ளிக்கூடத்தில் இருந்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற பயணம். இதற்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தது என்பதனால் நீங்கள் பல தலைவர்களுடைய வாழ்க்கை வரலாறை படிக்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் நம்முடைய பள்ளி மாணவர்களுக்கு வைக்கின்ற வேண்டுகோள்.
முதல்ல நல்லா சாப்பிடுங்க நல்ல விளையாடுங்க நல்ல படிய சாப்பிடுங்க விளையாடுங்க படிங்க என்பது எல்லாமே பார்த்தீங்கன்னா ஒரு விதத்தில் தன்னம்பிக்கையை தரக்கூடியதுதான். நீங்க படிக்கும் ஒரு புத்தகத்தை வந்து ஒரு கான்பிடென்ட் நீங்க படிக்கிறீங்க நீங்க அதை படிக்கும்போது உங்கள் அறியாமல் உள்வாங்கியதை உன்னுடைய தோழிகோ அல்லது உன்னுடைய மற்ற நண்பர்களுக்கு சொல்லித் தருகின்ற அளவுக்கு எனக்கு வந்து தன்னம்பிக்கை தரக்கூடியது அப்படின்னு பார்க்கும்பொழுது இது போன்ற வாசிப்பு. அதனால்தான் இன்றைக்கு இந்த நிகழ்வை முடித்துவிட்டு நானும் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர் நம்முடைய மாவட்டத்தினுடைய அமைச்சர் நேரு எல்லாம் துறையூர் ஒன்றியத்தில் இருக்கின்ற வாசிப்பு இயக்கம் அப்படிங்கிறத இன்றைக்கு நாங்கள் தொடங்கி வைக்கின்றோம்.
முதல் முதலாக தமிழ்நாட்டில் அதை தொடங்கி வைக்கின்ற நிகழ்வும் இன்றைக்கு நடைபெற இருக்கின்றது. மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர்களுக்கு பல்வேறு திட்டங்களை நம்முடைய கல்வித் துறை சார்பாக கொண்டு வருகிறேன். ஏதோ நாட்டினுடைய முதலமைச்சராக இருந்த திட்டத்தை தீட்டவில்லை உங்களுடைய தந்தை ஸ்தானத்திலிருந்து இந்த திட்டங்களை தான் தீட்டுகிறேன் என்று சொல்லக்கூடியவர் நம்முடைய முதலமைச்சர் அவர் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள் எல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனத்தை நீங்கள் செலுத்துங்கள் உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது நாட்டினுடைய முதலமைச்சராக அதனுடைய பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார்.
அதை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய பெத்தவங்க, மூத்தவர்கள் அதேபோன்று பள்ளியில் இருக்கின்ற நமக்கான ஆசிரியர் பெருமக்கள் என்னென்ன அறிவுரை சொல்கிறார்களோ என்னென்ன வழிகாட்டுதல்கள் உங்களுக்கு தருகிறார்களோ. அதை பின்பற்றக்கூடிய நல்ல மாணவ செல்வங்கள் என்கின்ற அந்தப் பெயரை எடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் என்பது இங்கு வந்துட்டு இங்கிருந்து பலபேர் டாக்டரா போலாம், பல பேர் இன்ஜினியர் ஆகலாம், பலபேர் கல்வி அமைச்சராக கூட ஆகலாம். ஆனால், பள்ளிக்கூடம் என்பது இது மட்டுமல்ல இங்கு வந்து விட்டு 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீங்கள் செல்லும் பொழுது இந்த சமுதாயத்தில் நடமாடக்கூடிய நல்ல மனிதர்களை உருவாக்கக்கூடிய இடம் அது பள்ளிக்கூடம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுடைய படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வருகை தந்திருக்கின்ற உங்களுக்கும் உங்களை வளர்த்தெடுக்கின்ற பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்த நேரத்தினுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களும் தெரிவித்து இந்த அவர்களின் நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம் என உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட சிஇஓ சிவக்குமார், துறை அதிகாரிகள் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர் தர்மராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision