திருச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய விரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:

திருச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய விரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:

திருச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களால் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள, 9 தொகுதிகளில் மொத்த ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 96 ஆயிரத்து 30 பேர். பெண் வாக்காளர்கள், 11 லட்சத்து 51 ஆயிரத்து 630 பேர். மூன்றாம் பாலினத்தவர், 195 பேர். மொத்தம், 22 லட்சத்து 47 ஆயிரத்து 855 வாக்காளர்கள்.

Advertisement

சேர்த்தல், நீக்கல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, 4,930 ஆண்கள், 5,358 பெண்கள், 5 மூன்றாம் பாலினர் என மொத்தம், 10 ஆயிரத்து 293 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

4,027 ஆண்கள், 4,588 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 8 ஆயிரத்து 617 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.