“ஆன்லைன் அன்னப்பூரணிகள்” ஆன்லைன் உணவகங்களின் ஸ்பெஷல் ஸ்டோரி:
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி !!
ஆனால் இன்று தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்!
யார் இவர்கள்?
உணவை நாம் தேடி செல்லும் காலம் போயி உணவு நம்மை தேடி வரும் காலம் வந்துவிட்டது…முன்பெல்லாம் “இந்த செல்போனை நோன்டிக்கிட்டே இருக்கியே இத வைத்து சாப்பிடவா முடியும்??? என்பார்கள் ஆனால் இப்பொழுது இந்த செல்போன் மூலம் சாப்பிடவும் முடியும் என்பது உறுதி செய்துவிட்டது இந்த இணையம்!!
அனைத்து பொருட்களும் ஆன்லைனில் வந்துவிட்ட நிலையில் இப்பொழுது உணவும் ஆன்லைனில் வந்துவிட மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது..
முன்பெல்லாம் உணவு ஆர்டர் செய்தால் அந்த பெரிய கம்பெனி நிறுவனங்கள் அவர்கள் ஆட்கள் மூலமாகக் கொண்டு வந்து கொடுப்பார்கள்
ஆனால் இன்று முனியாண்டி கடை பலகாரத்திலிருந்து மூன்று மாடி வரை உள்ள பெரிய ஹோட்டல்களில் உள்ள உணவுகளும் நம்மை தேடி வருகிறது!!! இவர்கள்தான் ஆன்லைன் அன்னப்பூரணகள்!!!Swiggy
Zomato
Uber eats
இன்னும் பல வகையான ஆன்லைன் ஆப் இருந்தாலும் இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
இவை எப்படி செயல்படுகிறது?
இவர்களுக்கு சொந்தமான உணவகங்கள் கிடையாது. ஆனால் இதை எப்படி செயல்படுகின்றது கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு!
ஒரு உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் அதாவது ஒரு ஹோட்டலில் உரிமையாளருக்கும் அங்கு வரும் கஸ்டமருக்கும் இடையில் செயல்படுவது தான் இந்த நிறுவனங்கள்!
வீட்டிலிருந்தபடியே செல்போனில் இந்த செயலிக்குள் சென்று எந்த உணவகத்தில் எந்த வகையான உணவு வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்த உணவகத்தில் உங்கள் ஆர்டர் செல்லும் அவர்கள் அதை கன்பார்ம் செய்வார்கள். கன்பார்ம் செய்யப்பட்டவுடன் இதன் ஊழியர்கள் அதாவது (டெலிவரி பாய்) அவ்விடத்திற்கு விரைவார்கள்.
உணவை வாங்கிய டெலிவரி பாய் கஸ்டமர் வீட்டுற்கு செல்வான் இதில் டெலிவரி பாய் எந்த இடத்தில் வருகிறான் என்பதை கூட எளிதில் டிரேஸ் செய்யலாம்!
இதில் மக்களுக்கு என்ன பயன்?
அவர்களுக்கு எந்த உணவகத்தில் எந்த உணவு வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உணவகங்களிலிருந்து உணவுகளை பெற்றுக் கொள்ளலாம்
இந்த நிறுவனங்கள் 20 முதல் 50 சதவீதம் வரை டிஸ்கவுன்ட் தருவதால் அதாவது ஹோட்டல் விலையை விட குறைவாக உள்ளதால் இதனையே விரும்புகின்றனர்… உதாரணமாக ஒரு ஹோட்டலில் மட்டன் பிரியாணி 120₹ ரூபாய் என்றால் இந்த நிறுவனங்கள் இருந்து வெறும் ₹49 ரூபாய்க்கு கொடுக்கின்றன இதனால் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
மக்களுடைய நேரம் குறைவதால் வருங்காலத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு:
வெளியூரிலிருந்து தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஹாஸ்டல் பாய்ஸ் அவர்களுக்கு ஆன்லைன் உணவகங்கள் பெரிதும் உதவுகின்றன.
ஹாஸ்டல் பாய்ஸையை சந்தித்து பேசியபோது”எங்க ஒரு சிம்’முக்கு முதலாவது 5 ஆர்டர் 50% ஃபிரியா தராங்க அதுக்காக நாங்க சிம்’மயே மாத்தி இதோட பத்து பதினஞ்சு சிம் வாங்கிட்டு இருக்கங்க எங்க பசங்க”ஹாஸ்டல் சாப்பாட்டை வாயில் வைக்க முடியல கடவுள் மாதிரி வந்தாங்க நம்ம ஸ்விகீ ,உபர் ஈட்ஸ் எல்லாம்”இவங்க நல்லா இருக்கனும்.
என்று புன்னகைத்தார்கள்.
இதில் டெலிவரி பாய்க்கு என்ன பயன்?
வேலையில்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதன் மூலம் வேலை பெற்றார்கள்
பகுதி நேரமும் வேலை இருப்பதால் படித்துக்கொண்டே மாணவர்களும் இதில் களமிறங்கியுள்ளனர்.
முழு நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு 15 முதல் 18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது பகுதி நேர வேலை ஆட்களுக்கு சுமார் 7 ஆயிரம் வரை கிடைக்கிறது .
முழு நேர வேலையானது காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையும் மற்றும் பகுதிநேர வேலையானது 3 மணியிலிருந்து 5 மணியில் இருந்து தொடங்குகிறது.
வருகின்ற நாட்களில் ஆன்லைன் டெலிவரி பாய்கள் அதிகமாகவும் மனநிறைவு கிடைக்கும் வேலையாக கருத ஆரம்பிப்பார்கள்.
இந்த வேலையில் சேர ஒரு ஆண்ட்ராய்டு மொபைலுல் ஒரு பைக்கும் இருந்தால் போதுமானது என்று ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
ஆன்லைன் நிறுவனங்களுக்கு என்ன பயன்?
ஒரு ஹோட்டல் உரிமையாளரையும் ஒரு டெலிவரி பாயையும் ஒரு கஸ்டமரையும் இணைப்பது இந்த நிறுவனங்களின் வேலை. ஒரு டெலிவரி பாய் கஸ்டமருக்கு போன் அடித்தால் கூட இந்த நிறுவனங்களுக்கு அழைப்பு வந்து தான் கான்பிரன்சிங் மூலம் செய்யப்படும்.
இந்த ஆன்லைன் நிறுவனங்கள் ஓட்டல்களில் பேசி சில தள்ளுபடிகளை பெற்று அதை அப்படியே கஷ்டமர்களுக்கு தருகின்றன.இன்றைய நெருக்கடியான சூழலில் மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை விட இந்த ஆன்லைன் அன்னபூரணியே பெரிதும் பயன்படுகின்றன.!!!!