"எம்.ஜி.ஆரின் ஆத்மாதான் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்" - திருச்சியில் எம்ஜிஆர் சிலையிடம் மனு கொடுத்து விவசாயிகள் போராட்டம்!!

"எம்.ஜி.ஆரின் ஆத்மாதான் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்" - திருச்சியில் எம்ஜிஆர் சிலையிடம் மனு கொடுத்து விவசாயிகள் போராட்டம்!!

Advertisement

"எம்.ஜி.ஆரின் ஆத்மா தான் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்" என்று திருச்சியில் எம்.ஜி.ஆரின் சிலையிடம் மனு கொடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருக்கும் நிலையில், மத்திய அரசானது தாங்கள் கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் அணி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தமிழக விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக இங்கு தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த கடந்த 15 நாட்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், மற்ற தானியங்களுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள  எம்.ஜி.ஆர் சிலையிடம் மனுவை அளித்தனர். 

Advertisement

அப்போது விவசாயிகள் கூறுகையில்... "உயிரோடு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகளையும் அரசு துறை சார்ந்த அனைவரையும் சந்தித்து நாங்கள் கொடுக்காத மனுக்கள் இல்லை. எம்ஜிஆரின் ஆத்மாவாது  விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று கூறி அவருடையகாலில் விழுந்து மனுக்களை கொடுக்கிறோம்" என்று கூறினர்.

 

அனைவரும் எம் ஜி ஆர் சிலையிடம் மனு கொடுக்க முயற்சித்த நிலையில் காவல்துறை அனுமதிக்காததால் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement