திருச்சி மாநகரில் (10.10.2021) நாளை 200 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் 

திருச்சி மாநகரில் (10.10.2021) நாளை 200 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் 

திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் எங்கும் நாளை (10.10.2021) மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் குறிப்பிட்டுள்ள 200 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மேற்காணும் பட்டியல் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இது நாள் வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு கொரோனா நோயிலிருந்து தங்களை தங்கள் குடும்பத்தினர்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn