திருச்சி மாற்றுத்திறனாளி நல அதிகாரி மண்டையை உடைத்த ஓட்டுநர் கைது

திருச்சி மாற்றுத்திறனாளி நல அதிகாரி மண்டையை உடைத்த ஓட்டுநர் கைது

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக சந்திரமோகன் (50) தற்போது பணியாற்றி வருகிறார். இதே அலுவலசுத்தில் திருச்சி பாலக்கரை கீழபுதூர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் வயது ( 40 ) என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வாகனத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை டிரைவர் சந்திரசேகரிடம் , வாகனத்தின் லாக்புக்கை கொண்டு வரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார். உள்ளே வந்த டிரைவர் சந்திரா சேகர் அதிகாரியிடம் தனக்கு இரண்டு மாதங்களாக அரியர் பணம் வரவில்லை என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிரைவர் , அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து , அதிகாரியின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn