இந்திய இரயில்வேயின் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருதை வென்றது தெற்கு ரயில்வே பொன்மலை பணிமனை

இந்திய இரயில்வேயின் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருதை வென்றது தெற்கு ரயில்வே பொன்மலை பணிமனை

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிந்துரை திட்டத்தில் பங்கேற்க ரயில்வே வாரியத்தின் செயல் திறன் மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அழைப்பு விடுப்பது வழக்கம். அதே போல் இவ்வருடம் நடத்தப்பட்ட போட்டியில்
தெற்கு ரயில்வே பொன்மலை பணிமனை பங்கேற்றது.
கொரோனா தொற்று  காரணமாக இப்போட்டியின் மதிப்பீடு அறிவிப்பு தாமதமாகி ரயில்வே வாரியம் தற்போது முடிவை அறிவித்துள்ளது. 

இணையத்தின் மூலம் மின்சக்தி மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு முறையை உருவாக்கி செயல்படுத்துவதற்காக பொன்மலை பணிமனைக்கு இப்போட்டியின் பரிசு கிடைத்துள்ளது. 

பொன்மலை பணிமனையில் நுண்ணிய அடிப்படையில் மின் பயன்பாட்டை மதிப்பீடு செய்வதற்காக 300அளவீட்டு சாதனங்கள் துணை மின் நிலையங்கள் மற்றும் பல்வகை இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ளது . இவற்றின் மூலம் பயன்பாட்டு அளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மேகக்கணினியில் பதிவேற்றி  ஒருங்கிணைந்து அறிக்கைகளை தருகிறது. 

இந்த அமைப்பு ஒவ்வொரு நொடியும் ஆற்றல் நுகர்வு தரவை பெறுவதால், இந்த ஆற்றல் திட்டமிடல் மற்றும் உயர் நுகர்வு இயந்திரங்களை  அடையாளம் காணல் இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் இயந்திரங்களின் செயலாற்ற இயக்கம் ஆகியவற்றை அறிய உதவுகிறது. 

மேலும் துணை மின் நிலையங்களில் உள்ள ஃபீடர்களில் வெப்பநிலை உணரும் கருவிகள் பொருத்தப்பட்டு அவைகளும் ஆற்றல் மேலாண்மை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன .
இதன் மூலம் வரும் தகவல்களை கொண்டு மின் சுமை மற்றும் மின்சுமை நிலைகளை அறியலாம் . மேலும் இத் தகவல்களை கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர் மின்தடை மற்றும் தீ விபத்து ஆபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.


இது மிகுந்த சிக்கனமான அமைப்பு முறை மட்டுமல்லாமல் மென்பொருள் மற்றும் மென்பொருள் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு விற்பனையாளரை சார்ந்து உள்ள நிலையினை அகற்றியுள்ளது .
மேலும் விற்பனையாளரின் கருவியை  விட அதிக செயல்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது .
இக்கருவி ரயில் வண்டிகளில் மற்றும் ரயில்வே பணிமனைகளில் உள்ள இயந்திரங்களில் நிறுவப்பட்ட அவற்றின் செயல்பாடுகளை அறிய உதவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU