பெண் பயணி மீது ஏறிய அரசு பேருந்து - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

பெண் பயணி மீது ஏறிய அரசு பேருந்து -  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

மதுரை ஆளவந்தான் நகரை சேர்ந்தவர் ரோகினி ( 55 ). இவரது மகள் திருமணமாகி திருச்சியில் வசித்து வருகிறார். தனது மகளை பார்பபதற்க்காக மதுரையிலிருந்து அரசு பேருந்து மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார்.

Advertisement

அப்போது அந்த பேருந்தின் முன் பக்கத்தில் சென்றபோது ஓட்டுனர் பேருந்தை நகர்த்தியுள்ளார். அப்போது ராகினி மீது மோதியதில் கிழே விழுந்த பெண்ணின் மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த ரோகிணி அவசர ஊர்தி மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.