10 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து - காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்

10 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து - காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பணிமனையில் இருந்து இன்று காலை நகரப் பேருந்து (3b) ஓட்டுநர் தோமையராஜ் (50) மற்றும் நடத்துனர் ஏழுமலை (50) கோட்டையூர் சென்று கோட்டையூரிலிருந்து தெத்தூர், ஆலம்பட்டி, மருதம்பட்டி, அதிகாரம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு

திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகே பேருந்தை திருப்ப முயன்ற போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது ஏறி அருகில் இருந்த பத்தடி பள்ளத்தில் முள் புதருக்குள் இறங்கியது.

இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பத்துக்கு மேற்பட்டோர்க்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision