உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (29.03.2025)திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள்  சிறப்பு பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை பாராட்டினார்.

 இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இ.ஆரமுத தேவசேனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.சுரேஷ் உதவி இயக்குனர் ஊராட்சிகள் திரு. குமார் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வெ.ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி),

திரு.சரவணகுமார் (வட்டார ஊராட்சி) மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision