தீயணைப்பு மீட்பு பணியாளருக்கான குடியிருப்புகள்- காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (29.03.2025) திருச்சிராப்பள்ளி, துறையூரில் ரூபாய் 3.53கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு
மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து, குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இ.ஆரமுத தேவசேனா,துறையூர் நகர் மன்ற தலைவர் திருமதி.இ.செல்வராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.த.ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் திரு. ந.முரளி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சி மண்டல துணை இயக்குனர்
திரு. க.குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் செயற்பொறியாளர் திரு.கு.திருமலைசாமி, உதவி பொறியாளர் திரு.ஜெ.நாராயணசாமி,மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) திரு.ச. வடிவேல்,உதவி மாவட்ட அலுவலர் திரு.தே.வீரபாகு சிறப்பு நிலைய அலுவலர் திரு.பெ. பாலச்சந்தர் , அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision