லால்குடி பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை

லால்குடி பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் லால்குடி பகுதியில் போலீசார் திடீர் வாகனம் சோதனையில் ஈடுபட்டனர்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் உள்ள ரவுண்டானா மற்றும் ராயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் 10க்கும் மேற்பட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் உரிய நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்களை நிறுத்தி உடனடியாக நம்பர் பிளேட்டை பொறுத்தும்படி உரிமையாளருக்கு அறிவுறுத்தி தொடர்ந்து புதிய நம்பர் பிளேட்டை பொறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு விதிமுறைகளை மீறும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டையும் மாற்றியமைக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வந்த இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision