ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை துன்புறுத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in  தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision