முசிறி அருகே 35 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது!

முசிறி அருகே 35 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது!

முசிறி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 35 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் முசிறி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

முசிறி பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா ,பான் மசாலா ஆகியவை கடைகளில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில்

முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தன் தலைமையில் முசிறி இன்ஸ்பெக்டர்  முத்துக்குமார்,
சப் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி ஆகியோர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி அருகே உள்ள பொன்னாங்கன்னி பட்டி கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 
பான் மசாலா, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொண்ணாங்கன்னி பட்டியில் ஒரு வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
அங்கு ரூ ,35 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா ,குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த து பொன்னாங்கன்னி பட்டி கிராமத்தை சேர்ந்த கார்மேகம் என்பவரின் பாரதிதாசன் (32), மோகன்ராஜ் (28), குழந்தைவேல் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து பான்மசாலா பதுக்கி வைத்திருந்த பாரதிதாசன், மோகன்ராஜ், இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய் து விசாரணை மேற்கொண்டனர் அதில் பாரதிதாசன் பெங்களூருவில் இருந்து பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது அதனடிப்படையில் பாரதிதாசனை முசிறி போலீசார் சிறையில் அடைத்தனர்.  விசாரணை முடிந்து மோகன்ராஜை போலீசார் விடுவித்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடி தலைமறைவான குழந்தைவேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.