திருச்சியில் சரித்திர பதிவேடு ரவுடியின் கூட்டாளிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
தமிழக காவல்துறை இயக்குநர், 23.09.2021-ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் 25.09.201ஆம் தேதி இரவு 10.00 மணி வரை ரவுடிகளை பிடிப்பதற்கான தீவிரவேட்டை நடத்த அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி மேற்பார்வையில், அனைத்து காவல் அதிகாரிகளும், ஆளிநர்களும் 23.08.2021-ஆம் தேதி மாலை 6.00 மணிமுதல், 24.09.2021-ஆம் தேதி காலை 6.00 மணிவரை தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் 150 ரவுடிகளை பிடித்து, அவர்களிடம் ஆயுதங்கள் ஏதும் உள்ளதா? கூட்டாளிகள் யாரேனும் உடன் உள்ளனாரா?
என விசாரித்தனர். மேலும் காட்டுப்புத்தூர் காவல் நிலைய சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளி குமார் (எ) சிவக்குமார் (48), த.பெ. மாணிக்கம், மேலத்தெரு, சீலைப்பிள்ளையார் புதூர், காட்டுப்புத்தூர் என்பவரை கைது செய்து இன்று 24.09.2021 -ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வேட்டையில், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லை பகுதியான கோப்பு
கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு சட்டவிரோதமாக கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சரித்திர பதிவேடு ரவுடி கோபி என்பவரின் கூட்டாளிகளான
கீழத்தெரு, கோப்பு, ஸ்ரீரங்கம்-தாலுக்காவைச் சேர்ந்த (1) பார்த்தசாரதி பாபு (26), த.பெ. மாசி, (2) மனோஜ்குமார் (24), த.பெ சந்திரசேகர், (3) அருண்குமார் (24), த.பெ. மாசி மற்றும் (4) கோகேஷ் (27), த.பெ. சந்திரன் ஆகியோர்கள் இருந்த நிலையில், அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றி நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn