ஓரினசேர்க்கை கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ஓரினசேர்க்கை கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர், வடக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் ராஜ்குமார் (20), என்பவர் சித்தாள் வேலை பார்த்து வந்ததுள்ளார். கடந்த 29.10.2022 ஆம் தேதி இரவு ராஜ்குமாரை சித்தர்காடு, தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலனும், மூவலூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பள்ளி மாணவரும் சேர்ந்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளனர். அதன் பேரில் மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி கடந்த (30.10.2022) ஆம் தேதி கபிலனையும், பள்ளி மாணவனையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கபிலனுக்கும், பள்ளி மாணவருக்கும் இடையே ஓரின சேர்க்கை. பழக்கம் நெடுநாட்களாக இருந்து வந்ததும், அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரையும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முடிவு செய்து மது போதையில் இருந்த ராஜ்குமாருக்கு மேலும் மதுவை ஊற்றி கொடுத்து அதிக போதையில் இருந்த ராஜ்குமாரின் ஆடைகளை சுழற்றி விட்டு நிர்வாணமாக்கி ஓரின சேர்க்கையில் (ஹோமோ செக்ஸில்) ஈடுபடுவதற்கு கட்டாய படுத்தியதும், அதற்கு ராஜ்குமார் ஒத்துக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த கபிலனும் பள்ளி மாணவனும் ராஜ்குமாரை இரயில் தண்டவாளத்தில் தள்ளி உடைந்த பீர் பாட்டிலால் தலையில் குத்தியும் தண்டவாளத்தில் இருந்த கருங்கல்லால் தலையில் தாக்கியும் கொலை செய்து ராஜ்குமார் உடலை தண்டவாளத்தில் போட்டு விட்டு இரயில் அடிபட்டு செத்ததாக தெரியும்படி ஜோடித்துள்ளனர்.

எதிரி கபிலனையும் மற்றும் பள்ளி மாணவனையும் கடந்த 30.10.2022ஆம் தேதி மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர்  சாந்தி  கைது  சிறையில் அடைத்தனர். மேற்படி கொலை குற்றவாளியான கபிலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர், ஏ.வனிதா, இருப்புப்பாதை மற்றும் காவல் துறை துணை தலைவர் அபிசேஷக் தீக்க்ஷித் ஆகியோர்களின் உத்தரவிட்டதன் பேரில் திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர்  கு.அதிவீர பாண்டியன் மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர்  R.பிரபாகரன் ஆகியோர் பரிந்துரை செய்ததின் காரணமாக இன்று (02.12.2022) ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  R.லலிதா, எதிரி கபிலனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து எதிரி கபிலன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO