திருச்சியின் அடையாளமாகும் கல்லூரிகள் -பகுதி 2

திருச்சியின் அடையாளமாகும் கல்லூரிகள் -பகுதி 2

கல்வி சிறந்த தமிழ்நாடு" என்று பாரதி எழுத காரணமாக இருந்த ஊர்களில் திருச்சி முக்கியமானது. ஓர் ஊரின் வளர்ச்சியில், வாழ்வில் கல்வி வளர்த்த கூடங்களும் வரலாறும் முக்கியம். கல்வி வளர்த்த பல பள்ளிகளும், கல்லூரிகளும் திருச்சியின் அடையாளங்களாய் ஒளிர்கின்றன.திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர்.

சேசு சபையினரால் திருச்சி, சென்னை, பாளையங்கோட்டை, வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1844 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ஒரு மாணவருடன் தொடங்கப்பட்ட தூய வளனார் கல்லூரி, 1883ஆம்ஆண்டு திருச்சிக்கு இடம்பெயர்ந்தது. மறைந்த குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் அதிகாரி என்.கோபாலசுவாமி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் என பல்துறைகளைகளில் சாதனைப் படைத்தவர்கள் இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்.

 

புனித ஜோசப் கல்லூரி திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இக்கலூரி வளாகத்தில் அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம் உள்ளது.

இக்கல்லூரியின் சிறப்புகளில் ஒன்றான 'டிஜிட்டல் நூலகத்தில்' 1,72,002 புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே, இங்குள்ள 'நியூட்டன் மியூசியம்' 1885 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட ஒன்றாகும். 2.5 லட்சம் பதப்படுத்தப்பட்ட தாவரங்களைக்கொண்ட ராபினாட் ஹெர்பேரியம் முக்கியமானது. 5 நட்சத்திர தகுதியை பெற்ற கல்லூரி இது. 2019 ஆம் ஆண்டு இக்கல்லூரி தனது 175வது பிறந்தநாளைக் கொண்டாடியது. இப்போது 7000 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

175 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரி திருச்சியின் அடையாளம் மட்டுமின்றி உலகெங்கிலும் பல தமிழர்களின் தனித்துவத்தை வெளி காட்டியதில் மிகப் முக்கிய பங்கு வகித்து வருகிறது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision