சாரநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின பயிற்சி முகாம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின பயிற்சி  முகாம்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மனிதநேய யோகா எனும் தலைப்பில் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு யோகா முறைகள் குறித்த பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இப் பயிற்சி முகாமிற்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியின் செயலர் ஸ்ரீ.S.ரவீந்திரன் தலைமை தாங்கினார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வளவன் முன்னிலை வகித்தார்.

இப்பயிற்சி முகாமிற்கு விவேகானந்தா யோகா மையத்தின் பயிற்சியாளர் சந்தானகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார்.

அவர் பேசுகையில் யோகாவின் சிறப்பு பற்றியும் அதை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார் மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி செய்யும் வகையில் உத்தகத்தாசனா, பாதஹஸ்தாசனம், புஜங்காசனம், அர்த்த சக்ராசனம், கபாலாபதி, பிராணயாமா, மகராசனம்,பத்மாசனம், வக்ராசனம் போன்ற 20 வகையான ஆசனங்களையும் முத்திரைகளையும் கற்றுக்கொடுத்தார்.

இதன் மூலம் 50 பேராசிரியர்கள் மற்றும் 301 மாணவர்கள் பயன்பெற்றனர்.

 நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் இதனால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைத்ததாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாரநாதன் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரகுபதி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO