திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு குரங்கம்மையா? பரிசோதனை - தனி வார்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு குரங்கம்மையா? பரிசோதனை - தனி வார்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த 28 வயது இளைஞர் ஷார்ஜாவில் பணிபுரிந்து விட்டு தீபாவளியன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை சோதனை நடத்தினர். உடல் வெப்பநிலை பரிசோதித்த போது லேசான குரங்கமை அறிகுறி காய்ச்சல் பாதிப்பு இருப்பது பெரிய வந்தது.

உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். அப்பொழுது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடி அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துக் கொண்டார். இங்கு யாரும் அவருக்கு இல்லாத சூழ்நிலையில் அவர் அங்கே தப்பி ஓடி விட்டதாக குறிப்பிட்டார்.

காவல்துறையினர் மருத்துவர்கள் இணைந்து அங்கு எந்த வசதியும் இல்லை என்று அவரிடம் தெரிவித்து மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்து தற்போது தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட முடிவுகள் வந்தவுடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிடும் என திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision