குடிமைப்பணி தேர்வு முடிவுகளில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சாதனை
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் மத்திய குடிமை பணி தேர்வு ஆணையத்தால் ஏப்ரல் 16 அன்று (16.04.24) வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற 21 பதவிகளுக்கு, மொத்தம் 1105 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மத்திய குடிமைப்பணி ஆணையத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி (01.02.2023) அன்று வெளியிடப்பட்டது. முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடடெமி மாணவர் இந்திய அளவில் முதலிடம்.
கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தில் பயின்ற 129 மாணவர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவில் முதல் இருபது இடங்களுள் ஐந்து மாணவர்கள் கிங்மேக்கர்ஸ் மாணவர்கள் ஆவர். கிங்மேக்கர்ஸ் மாணவரான மேதா ஆனந்த் 13 ஆம் இடமும், குணால் ரஸ்தோகி 15 வது இடமும், அயன் ஜெயின் 16 வது இடமும், K.M.கார்த்திக் ராஜா 329 வது இடமும், சிந்து N ராகவன் 336 ஆம் இடமும், M.முத்துஅரசி 705 ஆம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குனர் சத்ய ஶ்ரீ பூமிநாதன் கூறுகையில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 21 ஆம் தேதியில் TNPSC போட்டித் தேர்வில் மாநில அளவில் 9 ஆம் இடம் பிடித்து நகராட்சி ஆனையராக பதவி ஏற்க உள்ள சாதனையாளர் செல்வி பா. திவ்யா, கிங்மேகர்ஸ் IAS அகாடெமி திருச்சி கிளையில் கலந்து கொண்டு போட்டித் தேர்வில் வெல்வது குறித்தும், தனது வெற்றியின் ரகசியம் குறித்தும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளார். இந்த இலவச கருத்தரங்கம் மற்றும் 100 சதவிகிதம் வரை கட்டணச் சலுகை பெறுவதற்கான தேர்வில் கலந்து கொள்ள கீழே உள்ள QR CODE SCAN செய்யவும் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision