தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி காவலருக்கு பாராட்டு
திருச்சி மாநகரம் கே கே நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜராஜன் தடகளப் போட்டியில் சிறப்பாக பங்காற்றி வரும் இவர் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று அதில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதே போல நாகமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியிலும் மற்றும் காவல் துறையினருக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகளிலும், மாஸ்டர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து சிறப்பாக பங்காற்றி வரும் அவருக்கு கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் சக காவலர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO