கார் நின்ற பகுதியை விட்டுவிட்டு சாலை - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கார் நின்ற பகுதியை விட்டுவிட்டு சாலை - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

திருச்சி மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் எண்.4, வார்டு எண்.56, கருமண்டபம் பகுதிக்குட்பட்ட திருநகர் முதல் பிரதான சாலையில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை அப்புறப்படுத்தாமல், அதை ஒதுக்கிவிட்டு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வரப்பெற்றுள்ளது.

மேற்கண்ட பிரதான சாலை பழுதடைந்துள்ளதால், தற்காலிகமாக தார்பேட்ச் அமைக்கப்பட்டு தார்சாலை சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் அடிக்கடி பெய்து வரும் பெரும் மழையின் காரணமாக இச்சாலையில் மிகவும் தாழ்வான இந்த இடத்தின் குறுக்காக கழிவுநீர் வழிந்தோடி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும்

பொதுமக்கள் மேல் படுவதால் மிகுந்த சிரமமான நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கவும். மேற்படி சாலையில் AMRUT-2.0 திட்டத்தின் கீழ் புதைவடிகால் குழாய் அமைக்கும் பணி இச்சாலையில் செயல்படுத்தப்பட உள்ளதாலும், இந்த பள்ளமான இடத்திற்கு மட்டும் தார்பேட்ச் தற்காலிகமாக அமைக்கப்பட்டு சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.

இதற்காக மாநகராட்சியில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏற்கனவே அவ்வப்போது தார்சாலை அமைக்கப்பட்டதில் சேகரித்து வைத்த மீதமான தார்கலவை கொண்டு இந்த தார்பேட்ச் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision