முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியுரிமைக்கு விரைவில் சட்ட வடிவம் அமைச்சர் பேட்டி
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கொட்டப்பட்டு இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது......
தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 13 ஆயிரத்து 553 குடும்பங்களில், 38 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் தாய் உள்ளத்தோடு கட்டிக் காக்கும்என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர், விருப்பம் இல்லாமல், யாரும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.தற்போது கொரோனா கால நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
முகாம்களில் வசிப்பவர்களின் கல்வி, குடியுரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.முகாந்திரம் இல்லாமலும், குற்றத்தின் தன்மையை உறுதி படுத்தாமலும், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகிறது.
அதில், தனிக்க வனம் செலுத்தி, தீர்வு காணப்படும்.முகாம் வாசிகளுக்கு குடியுரிமை, கல்வி வழங்குவது தொடர்பாக, முகாம்களில்
ஆய்வு செய்து, அறிக்கை தருமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமரை நேரில் சந்தித்த தமிழக முதல்வர், குடியுரிமை சட்டம் தொடர்பாக வலியுறுத்தி உள்ளார். அதில் உள்ள சட்ட சிக்கல்களை, சட்டசபையில் விவாதித்து சட்ட வடிவம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC