பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம்- புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.
புகைப்படக்கண்காட்சியினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டமானது இந்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து மகளிர் மேம்பாட்டிற்கென செயல்படுத்தி வரும் திட்டமாகும்.
இத்திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக பாதுகாப்பு துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சமூக நலத்துறை, காவல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகியன பங்கேற்று செயல்படுத்தி வருகின்றன.
பாலின பேதமின்றி குழந்தைகளை வளர்ப்பது பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது. பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும் ஊக்குவிப்பது. பாலினம் சார்ந்த பொறுப்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்க்கும் விதமாக, ஆண்கள் மற்றும் சிறுவர்களை மாற்றுப் பணிகளில் ஈடுபட செய்வது. பாலினம் அறிய முயலும் எந்த சம்பவம் குறித்தும் புகார் தெரிவிப்பது, மகளிர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான,
வன்முறையற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவது. எளிமையான திருமணங்களை ஆதரிப்பது. பெண்கள் தங்கள் பரம்பரை சொத்துரிமை பெறுவதற்கு ஆதரவு அளிப்பது. குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து அவர்களுக்கு கற்பிப்பது நமது கடமையாகும்.
பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம். கல்வி பங்கேற்பினை உறுதிசெய்து அவர்களின் உரிமைகளை போற்றுவதாகும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரத்தின்படி 0-6 வயதுடைய குழந்தைகப் பாலின விகிதம் (CHILD SEX RATIO) தேசிய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள் என கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கமானது பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல். பெண் குழந்தைகள் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிதல். கல்வித்துறை. காவல்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மருத்துவத் துறையினருக்கு திட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல். பிறப்புக்கு முன்பு பாலின அடிப்படையில் கரு அழிக்கப்படுவதை தடுக்கும் விதமாக அனைத்து ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல். பெண் குழந்தை பிறப்பினை போற்றி மரக்கன்றுகள் நடுதல். ஆண்/பெண் பிறப்பு பாலின விகிதத்தை தெரிவிக்கும் தகவல் பலகைகள் கிராமம் தோறும் பராமரித்தல். பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகப்படுத்துதல், தக்கவைத்தல், அவர்கள் உயர் கல்வி நிலைக்கு மாறி செல்லுதலை உறுதிசெய்தல். சுகாதாரம், ஊட்டச்சத்து, மாதவிடாய் பற்றிய கல்வி, வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவற்றில் வளர் இளம்
பருவத்தினருக்கான உரிமைகளை மேம்படுத்துதல், ஆண் குழந்தைகளுக்கு நிகராக விளையாட்டுகளில் சிறந்து விளங்கிட பெண் குழந்தைகளை ஊக்குவித்து ஆதரவு அளித்தல். குழந்தை திருமணம் நடைபெறா கிராமம் என உருவாக கிராமங்களை ஊக்குவித்து பெருமை படுத்துதல். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை பாராட்டி திட்டத்திற்கான விளம்பர தூதுவர்களாக நியமித்தல் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துறையூர், அந்தநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு, இத்திட்டத்தின் நோக்கம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision