திருச்சியில் 87 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திருச்சி பீமநகர், அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள 15 கடைகளும் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் பீமநகர், அரியமங்கலத்திலுள்ள பிரபல பேக்கரியில் சுமார் 13 கிலோ இரண்டு வகைகளும் சுமார் 6 லிட்டர் பால் தயாரிப்பு தேதியும், காலாவதி தேதி இல்லாமலும் காலாவதியான உணவு பொருட்கள் இருந்த காரணத்தினாலும் பறிமுதல் செய்யப்பட்ட அளிக்கப்பட்டன. வழக்கு தொடுப்பதற்கு இரண்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் 15 கடைகளை ஆய்வு செய்தபோது பலமுறை எச்சரித்தும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த சுமார் 60 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா நான்கரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு கொடுப்பதற்காக 6 உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் 87 கிலோ உணவு பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நான்கரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடுப்பதற்கு எட்டு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சரியான லேபில் முறைகளை பின்பற்றி தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2005 இன் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn