திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாகன நிறுத்த கட்டணம் மீண்டும் வசூல் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாகன நிறுத்த கட்டணம் மீண்டும் வசூல்  செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பிரசித்திபெற்ற ஆலயமாகும்.

 இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வது வழக்கம் .

இதில் பெரும்பான்மையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை இருக்கிறது இந்த நிலையில் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் உள்ளூர் நகர பேருந்துகள், வேன்கள் மற்றும் சுற்றுலா பேருந்துகள், கார்கள் ஆகியவற்றிற்கும் கட்டணம் வசூலிக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பிற்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஆட்சேபனை தெரிவித்து திருச்சி மாநகராட்சி ஆணையருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியிருப்பதாவது,

 திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் உணர்த்துவது ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் என்பதுதான் பொருள்.

 இது கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோரது வாகனங்களை குறிக்கும்.

 மேலும் கோயிலை நீக்கிவிட்டு பார்த்தால் வெளியூர் வாகனங்கள் ஸ்ரீரங்கத்திற்கு வர வேண்டிய அவசியம் இருக்காது இப்படி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாநகராட்சிக்கு ஏற்கனவே ஆட்சேபனை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு சட்டத்திற்குப் புறம்பான வகையில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

மேலும் இது கோயில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது.

மாநகராட்சி நிர்வாகம் ஏல அறிவிப்பு வெளியிட்டதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் ஆகியோர் கோயில் நிர்வாகமே பணம் வசூலிப்பதாக தவறான கருத்தை எண்ணி இருக்கின்றனர் எனவே இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை இருப்பதாகவும் ஏல நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறும் கேட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO