ரூ 47 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ரூ 47 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ. 47 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

எசனைக்கோரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு லால்குடி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 47 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டியவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமாவளவன், இலால்குடி தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் இராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வீரமணி கிருஷ்ணன் முன்னாள் மாணவர் ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நாராயணசாமி , எசனைக்கோரை ஊராட்சி செயலர் முருகானந்தம், வழக்கறிஞர் உத்தமச்செல்வன், கல்வியாளர் அப்துல் காதர் , இன்ஜினியர் ஜாண்டி ரோட்ஸ், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision